The Big Billion Days விற்பனை: 33 கோடிக்கும் அதிகமாக பயனர்களை ஈர்த்த Flipkart
Flipkart-இன் முக்கிய பண்டிகை விற்பனையான, The Big Billion Days (TBBD) 2024, ஒரு வெற்றிகரமான தொடக்கத்தை கண்டுள்ளது.
The Big Billion Days விற்பனையின் முதல் நாளில் மட்டும் 33 கோடிக்கும் அதிகமான பயனர் வருகைகளை ஆன்லைன் வணிக ராட்சதனான Flipkart பதிவு செய்துள்ளது.
ஆரம்ப கால போக்குகள் ஆரோக்கியமான வாடிக்கையாளர் உணர்வை சுட்டிக்காட்டுகின்றன, இதில் மொபைல்கள், எலெக்ட்ரானிக்ஸ், பெரிய உபகரணங்கள், பேஷன், அழகு மற்றும் வீட்டு தயாரிப்புகள் போன்ற வகைகளில் வாடிக்கையாளர்களிடையே அதிக மவுசு உள்ளது.
முக்கிய நகரங்கள் போன்ற புது டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் TBBD 2024 இன் முதல் 24 மணி நேரத்தில் தேவை அதிகரித்துள்ளது.
விரைவான டெலிவரி சேவை
இந்த விற்பனையில், Flipkart தனது புதிய விரைவான வணிக சலுகையான 'மினிட்ஸ்' மூலம் வேகமாக டெலிவரி வழங்கலை உறுதியளித்துள்ளது.
Flipkart-யின் ஒரு அறிக்கையில், மும்பை போன்ற நகரங்களில், hyperlocal பின் கோடுகளில் உள்ள அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் விற்பனையிலும் 25% Flipkart நிமிட டெலிவரிகளிலிருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.