பிரித்தானியாவில் கோர கார் விபத்து: சிறுவன் உயிரிழப்பு: இரண்டு பேர் கவலைக்கிடம்
பிரித்தானியாவில் நடந்த மோசமான கார் விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கார் விபத்து
பிரித்தானியாவில் வெள்ளிக்கிழமை 11.50 மணி அளவில் பெட்ஃபோர்ட்ஷையர் (Bedfordshire) பகுதியில் இரவு நடந்த கோரமான விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கார் விபத்தில் மேலும் இரண்டு பேர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிதிவண்டியில் இரண்டு சிறுவர்களும், மற்றொரு சிறுவன் புஷ் அலாங் ஸ்கூட்டரில் பயணம் செய்து இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விசாரணை மற்றும் கைது நடவடிக்கை
நீல நிற BMW கார் ஒன்று இந்த விபத்தை ஏற்படுத்தி இருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய பிறகு சம்பவ இடத்தில் நிற்காமல் கார் அங்கிருந்து தப்பிச் சென்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 20 வயது ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது அபாயகரமான வாகனம் ஓட்டி மரணம் ஏற்படுத்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |