இந்திய மாநிலத்தை தாக்கிய கனமழை! வெள்ளத்தில் தத்தளிக்கும் 600 கிராமங்கள்..19 பேர் பலி
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 19 பேர் பலியாகியுள்ளனர்.
10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள்
கடந்த சில நாட்களாக உத்தரபிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் ஒரே நாளில் கனமழையால் பாதிக்கப்பட்டன.
தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் தத்தளித்தன. மேலும் மின்னல் தாக்குதல் உட்பட கனமழைக்கு 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை முடக்கம்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நிவாரணப் பணிகள் துரிதகதியில் நடந்து வரும் நிலையில், உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
மாநிலத்தில் பல்வேறு கிராமங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |