வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்: TVS நிறுவனம் அறிவிப்பு
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் வாகனங்களை இலவசமாக சர்வீஸ் செய்து தருவதாக TVS நிறுவனம் தெரிவித்துள்ளது.
TVS நிறுவனம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கூடிய வரலாறு காணாத கனமழையை கொட்டி சென்றுள்ளது.
இதனால் சென்னையின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வற்றாததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
AP
அதே சமயம் சாலையில் மற்றும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் இந்த மழை வெள்ளத்தால் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களின் வாகனங்களையும் முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக சர்வீஸ்(வேலைக்கான கூலி எதுவும் வாங்காமல்) செய்து தருவதாக TVS நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சலுகை 18ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களின் எஞ்சின்களை restart செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வாகனங்களை சர்வீஸ் நிலையங்களுக்கு எடுத்து செல்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டு இருப்பதாக TVS நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |