பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் ஐரோப்பிய நாடு... துணிந்து கொள்ளையிடும் மக்கள்
கனமழை மற்றும் பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் ஸ்பெயின் நாடு, தற்போது கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
39 பேர்கள் கைது
இதுவரை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 39 பேர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில், தெருக்கள் மொத்தம் சேற்றில் மூழ்கியுள்ளது.
செல்போன்கள் அல்லது கணினிகள் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கொள்ளையடிப்பவர்களை கைது செய்யும் பொருட்டு ரோந்து படைகளை வணிக வளாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் உள்ளூர்வாசிகள், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கு இதுவரை 158 பேர் இறந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் - வலென்சியாவில் மட்டும் 155 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
செவ்வாய்கிழமை பெய்த மழையால் தெருக்கள் ஆறுகளாக மாறியதையடுத்து, அப்பகுதியினர் மற்றும் அதிகாரிகள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் வீடு வீடாகச் சென்று தேடத்தொடங்கியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஞ்சள் மழை எச்சரிக்கை
செவ்வாய்கிழமை தொடங்கி புதன்கிழமை தொடர்ந்த மழையினால் மலகாவிலிருந்து வலென்சியா வரையிலான தெற்கு மற்றும் கிழக்கு ஸ்பெயினில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அடர்ந்த சேறு வீடுகள் மற்றும் தெருக்களை மூடியுள்ளது மற்றும் குடியிருப்பாளர்கள் குப்பைகளை அகற்றவும் கார்களை சுத்தம் செய்யவும் போராடி வருகின்றனர். இதற்கிடையில், ஏற்கனவே மழையால் மிதக்கும் வலென்சியா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மஞ்சள் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது,
இது நள்ளிரவில் 20 மிமீ அதிகமாக பெய்யக்கூடும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ஸ்பெயினுக்கு மஞ்சள் மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது, இது சலமன்காவிலிருந்து ஹுல்வா மற்றும் ஜிப்ரால்டர் வரை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை 6 மணி அல்லது நள்ளிரவு வரை 15 மிமீ முதல் 40 மிமீ வரை மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |