900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்
இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஏற்பட்ட புயல், அடைமழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை 900 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இறப்பு எண்ணிக்கை 334
புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

வெப்பமண்டல புயலால் அதிகரித்த கனமழை, சமீபத்திய நாட்களில் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளை மூழ்கடித்து, ஆயிரக்கணக்கான மக்களை முகாம்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன், குடியிருப்பும் உற்றார் உறவினர்களை இழந்து தவிக்கும் மோசமான நிலைக்கும் உள்ளாகினர்.
இலங்கையில் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இறப்பு எண்ணிக்கை 334 என அதிகரித்துள்ளதாக ஞாயிறன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் காணாமல் போனவர்கள் எண்ணிக்கையும் அதிகம் என்றே கூறப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவுகரமான சுனாமிக்குப் பிறகு இலங்கையைத் தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவு இதுவென்றே கூறுகின்றனர்.
அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சர்வதேச ஆதரவுடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதாக உறுதியளித்தார்.

இதனிடையே, இந்தோனேசியாவில், சுமத்ரா தீவின் கடுமையாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளை அடைய அதிகாரிகள் திணறிவரும் நிலையில், இறப்பு எண்ணிக்கை 442 கடந்துள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.
மிக மோசமான வெள்ளம்
அத்துடன் 402 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமத்ரா தீவின் குறைந்தது இரண்டு பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை வரை நெருங்க முடியவில்லை என்றும், உதவிகளை வழங்க ஜகார்த்தாவிலிருந்து இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வானிலை மற்றும் கனரக உபகரணங்கள் இல்லாததும் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக அமைந்தது. தாய்லாந்தில், ஒரு தசாப்தத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் குறைந்தது 162 பேர் மரணமடைந்துள்ளனர், அதிகாரிகள் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதுடன், பெருவெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களையும் அகற்றி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை இலங்கைத் தலைநகரில், சக்திவாய்ந்த சூறாவளியை அடுத்து மண்சரிவுகள் ஏற்பட்டதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கிட்டத்தட்ட 148,000 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |