கனமழை, பெருவெள்ளம்... ஆசிய நாடொன்றில் மில்லியன் டன் அரிசி சேதம்
வங்கதேசத்தில் ஏற்பட்ட கமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக 1.1 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி சேதமடைந்துள்ளதாக வேளாண் அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மில்லியன் கணக்கான மக்கள்
இதனையடுத்து உயரும் உணவு பண்டங்களின் விலைகளுக்கு மத்தியில் முதன்மையான தானியங்களின் இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஆகஸ்டு மற்றும் அக்டோபர் மாதங்களில் பருவழை கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தது 75 பேர்கள் பெருவெள்ளம் மற்றும் விபத்துகளில் சிக்கி மரணமடைந்துள்ள நிலையில், மில்லியன் கணக்கான மக்கள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் பயிர் சேதம் மிகக் கடுமையாக உள்ளது. இந்த ஆண்டு பெருவெள்ளம் காரணமாக அரிசி உற்பத்தியில் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து 500,000 டன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் தனியார் நிறுவனங்களுக்கும் அரிசி இறக்குமதிக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று உணவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடுதழுவிய போராட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கு பின்னர், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து ஆகஸ்ட் மாதம் ஆட்சியைப் பிடித்த இடைக்கால அரசாங்கம்,
சுமார் 380 மில்லியன் டொலராக
சமீபத்திய மாதங்களில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் உயர்ந்துள்ள உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த போராடி வருகிறது. இந்த நிலையில் அண்டை நாடான இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதிக்கு வங்கதேசம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியா சமீபத்தில் தான் புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கான வரியை 10 சதவிகிதமாக குறைத்தது. வெள்ளம் காரணமாக அரிசி மட்டுமின்றி, 200,000 டன்களுக்கும் அதிகமான காய்கறிகளும் சேதமடைந்துள்ளது.
மொத்த சேத மதிப்பு சுமார் 380 மில்லியன் டொலராக இருக்கும் என கூறுகின்றனர். அரிசி உற்பத்தியில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வங்கதேசம், ஆண்டுக்கு 40 மில்லியன் டன் அரிசியை பொதுவாக உற்பத்தி செய்கிறது.
இருப்பினும், இயற்கை பேரழிவுகள் பெரும்பாலும் உற்பத்தியை சீர்குலைத்து, இறக்குமதியை சார்ந்திருப்பதை அதிகரிக்க வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |