மலேசியா-தாய்லாந்தை தாக்கிய பேரழிவு வெள்ளம்: 30 உயிரிழப்பு!
தென்கிழக்காசியாவைப் புரட்டிப் போட்ட கடும் மழை மற்றும் வெள்ளத்தால் மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்து கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
மலேசியாவை புரட்டி போட்ட மழை வெள்ளம்
மலேசியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்யும் மழையை விட கடந்த 5 நாட்களில் மட்டும் அதிக மழை பொழிந்ததால் கிளந்தான் மற்றும் திரங்கானு உள்ளிட்ட மாகாணங்கள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கின.
இந்த பேரழிவு வெள்ளத்தால் மலேசியாவின் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய சுமார் ஒரு பில்லியன் ரிங்கிட் (224 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவாகும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
மீட்புப் படையினர் படகுகள் மூலம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழப்புகள்
மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் இதுவரை சுமார் 30 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
#Malaysia and #Thailand Battle Massive Floods#QNews pic.twitter.com/xMEKCMQHbb
— Qnews (@Qnewsegy) December 1, 2024
மலேசிய அரசு 491 நிவாரண முகாம்களை அமைத்து சுமார் 34 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கி வருகிறது.
அடுத்த ஓரிரு நாட்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |