குழந்தையை காருக்குள் பூட்டிவிட்டு கடவுளை வேண்டச் சென்ற பெற்றோர்: வந்து பார்த்தபோது நேர்ந்த துயரம்
அமெரிக்காவில் பெற்றோரால் 3 மணிநேரமாக காருக்குள் விடப்விட்ட 11 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
11 மாதக் குழந்தைக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமாய் தேவாலய ஆராதனையில் கலந்துகொள்ளச் சென்ற தம்பதி தங்கள் 11 மாதக் குழந்தையை காருக்குள் தனியாக விட்டுச் சென்றதால் வெப்பம் தாங்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டனில் இருந்து 900 கிமீ தெற்கே உள்ள பாம் பேயில் உள்ள மவுண்ட் ஆஃப் ஆலிவ்ஸ் எவாஞ்சலிகல் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Representative Image: TNS
காருக்குள் குழந்தை
தேவாலயத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மயக்கமடைந்த நிலையில் குழந்தையை பொலிஸார் கண்டுபிடித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற உடனேயே அவள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பொலிஸ் அறிக்கையின்படி, குழந்தையின் பெற்றோர் தேவாலயத்திற்குச் சென்றபோது குழந்தையை தற்செயலாக சுமார் மூன்று மணி நேரம் காரில் விட்டுச்சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்களா என்று பொலிஸார் கூறவில்லை.
Getty Images
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 38 குழந்தைகள் மரணம்
அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் hot car deaths என்று குறிப்பிடப்படுகின்றன. நாடு முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 38 குழந்தைகள் இதேபோன்ற சம்பவங்களால் இறக்கின்றனர்.
அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை 5 குழந்தைகள் இறந்துள்ளனர், அதில் பிளோரிடாவில் மட்டும் 3 பேர் என தரவுகள் தெரிவிக்கின்றன.
hot car deaths, USA, Children Death,