புளோரிடாவில் கொலையை பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை
புளோரிடாவின் ஆர்லாண்டோ அருகே கொலையைப் பற்றி செய்தி வெளியிடச் சென்ற இரண்டு பத்திரிக்கையாளர்களை கொலையாளி சுட்டுக்கொன்ற அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
பத்திரிக்கையாளர் கொலை
புளோரிடாவின் ஆர்லாண்டோ என்ற பகுதியில் ஒரு தாயும், அவரது 9 வயது மகளையும் குற்றவாளி கொலை முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அதில் தாய் உயிரிழக்கச் சிறுமி உயிருடன் மருத்துவனையும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த கொலையைப் பற்றி செய்தி வெளியிடச் சம்பவ இடத்திற்குச் சென்ற நியூஸ் 13 பத்திரிக்கையாளர்கள் இருவர் அங்குச் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் மர்ம நபரால் சுடப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே பத்திரிக்கையாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யார் அந்த குற்றவாளி?
கெய்த் மெல்வின் மோசஸ்(19) என்ற நபர் சந்தேகத்தின் பேரில் கையில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை விசாரணையில் அந்த இரண்டு கொலைக்கும் அவர் தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
மேலும் இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கெய்த் மெல்வின் மோசஸ்க்கும் இறந்த தாயிற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என விசாரணையில் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இருந்தும் கொலைக்கான காரணத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறையின் விசாரணையில் கூறியுள்ளனர்.
வெள்ளை மாளிகையிலிருந்து இரங்கல்
இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் ட்விட்டரில் இரங்கல் செய்தியை வெளியிட்டார்.
அதில் “ பத்திரிக்கைத் துறை ஊழியர்கள் என்றில்லை, இறந்த தாயும் காயப்பட்டுக் கிடக்கும் அவரது 9 வயது மகளும் கூட எல்லோருக்கு நீதி முக்கியம். இனி யாரும் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் உயிரோடிருக்கும் பத்திரிக்கையாளர் "நாங்கள் கொலை நடந்த இடத்தில் செய்தியை வெளியிடத் தயாராகிக் கொண்டிருக்கையில் எந்த லோகோவும், நம்பர் பிளேட்டும் இல்லாத வண்டியில் வந்த இருவரில் ஒருவர் தான் கையில் துப்பாக்கியுடன் எங்களை நோக்கிச் சுட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.