லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட்
புளோரிடாவை சேர்ந்த லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு $803 மில்லியன் டொலர் மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.
புளோரிடாவை சேர்ந்த நபருக்கு அடித்த மெகா ஜாக்பாட்
அமெரிக்காவின் புளோரிடாவில் வாங்கப்பட்ட லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்த குலுக்கலில் பிரம்மாண்டமான $803 மில்லியன் டொலர் என்ற மெகா ஜாக்பாட் பரிசாக விழுந்துள்ளது.
ஜூலை 28ம் திகதி நடந்த இந்த குலுக்கலில் வெள்ளை பந்துகள் 34,48, 49,59, 70 மற்றும் தங்க பந்து 12 என்ற எண்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வெற்றி எண்கள் ஒரு சேர அமைந்த இந்த லொட்டரி டிக்கெட் புளோரிடாவின் பிரேடன்டன் நகரின் ஸ்டேட் ரோடு 70-ல் உள்ள WaWa என்ற கன்வீனியன்ஸ் கடையில் இருந்து விற்பனையாகியுள்ளது.

இந்த வரலாற்று வெற்றியை அடைந்த நபருக்கு புளோரிடாவின் லொட்டரி செயலாளர் ரெஜினால்டு டிக்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பரிசு தொகையை பெறும் முறைகள்
இந்த பிரம்மாண்ட லொட்டரி வெற்றியை பெற்ற நபர் இரண்டு முறைகளில் தன்னுடைய பரிசை பெற்றுக் கொள்ளலாம்.
முதலாவது முறை, ஒரே தவணையாக வரிக்கு முந்தைய மதிப்பின் படி மொத்தமாக $345.5 மில்லியன் ரொக்க பணத்தை பெற்றுக் கொள்ளுதல்.
இரண்டாவது முறை, மொத்த பரிசுத் தொகையான $803 மில்லியனை 30 ஆண்டுகளுக்கு ஆண்டு தவணையாக பிரித்து பெற்றுக் கொள்ளுதல்.
லொட்டரி பரிசுகளுக்கு புளோரிடாவில் மாநில வரி என்பது கிடையாது, நேரடியாக மத்திய வரி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |