அமெரிக்காவில் 3 வயது குழந்தையை தாயிடம் இருந்து கடத்த முயன்ற நபரால் பரபரப்பு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வால்மார்ட் விற்பனை மையத்தில் தாயிடம் இருந்து 3 வயது குழந்தையை கடத்த முயன்ற யென்பான் மூடிலே (enban moodley) 40 என்ற நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுகிழமை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வால்மார்ட் விற்பனை மையத்தில் உள்ள வணிக கடை ஒன்றில் 3 வயது குழந்தையின் தாய் வழக்கமான பொருட்கள் வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது யென்பான் மூடிலே (40) என்ற நபர் காசாளரிடம் மோதலில் ஈடுபட்டுவதை பார்த்துள்ளார்.
இதனால் அந்த பெண் தான் வாங்கிய பொருள்களை விரைவாக பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
இந்த நிலையில் அவரை பின்தொடர்ந்து வணிக வளாகத்தின் கார் பார்க்கிங் பகுதிக்கு வந்த மூடிலே (40) அந்த பெண்ணின் 3 வயது குழந்தையை பிடித்து இழுத்து கடத்த முயன்றுள்ளார்.
இதனை சுதாரித்து கொண்டு அந்த பெண் கூச்சலிட்டதால், மூடிலே (40) விறுவிறுவென அந்த இடத்தை வெளியேறியுள்ளார்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் இடத்திற்கு வந்த பொலிஸார் வணிக வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் யென்பான் மூடிலேவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவிக்கையில், யென்பான் மூடிலே மீது குழந்தையை துன்புறுத்தியது போன்ற வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தின் போது மூடிலேவை நல்ல போதையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் நலனுக்காக இந்தப்பகுதிகளில் காவல்துறையின் ரோந்துப் பணியை அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.