புளோரிடாவில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட 30 வயது இளைஞர்: பரபரப்பை கிளப்பிய சம்பவம்
அமெரிக்காவின் புளோரிடாவில் மர்ம நபர் ஒருவர் கடைக்குள் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடாவில் பரபரப்பு
புளோரிடாவின் பிளைன்ட் சிட்டியில் உள்ள பப்ளிக்ஸ் சூப்பர் மார்க்கெட்டில்(Plant City Publix) நேற்று மாலை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
30 வயதான ஒருவர் திடீரென்று தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் தெரிவிக்கப்பட்ட தகவல்
மாலை 6:30 மணிக்கு சற்று பிறகு, வால்டன் வூட்ஸ் ஷாப்பிங் பிளாசாவில் உள்ள பப்ளிக்ஸ் கடையில் குழப்பம் நிலவுகிறது என்ற அழைப்பு காவல் துறைக்கு வந்தது.
பிளைன்ட் சிட்டி காவல் துறையின்(Plant City Police Department) தகவல்படி, கடைக்குள் ஒருவர் தீப்பிழம்பில் சிக்கி இருப்பதாக அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிர்ஷ்டவசமாக, தீயணைப்பான் வந்து சேருவதற்கு முன்பே அங்கிருந்தவர்கள் தீயை அணைத்துள்ளனர். பின்னர் அந்த நபர் அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுவரை சம்பவம் குறித்த முழு தகவல்களும் கிடைக்கவில்லை என்றாலும், தீ வைத்துக் கொள்ள எரிபொருள் ஒன்றை அந்த நபர் பயன்படுத்தியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |