Florona... குளிர் காய்ச்சலுடன் கொரோனா பாதிப்பும்: புதுவிதமான தொற்றை அடையாளம் கண்ட மருத்துவர்கள்
இஸ்ரேல் நாட்டில் குளிர் காய்ச்சலுடன் கொரோனா பாதிப்பும் இணைந்து புதுவிதமான தொற்று ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த புதுவித தொற்றிற்கு Florona என சுகாதார அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணி ஒருவர் இந்த வார துவக்கத்தில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இரட்டை தொற்றுடைய Florona பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய சுகாதார அமைச்சு இந்த இரட்டை தொற்று தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், பலர் Florona தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், ஆனால் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பும் குளிர் காய்ச்சலும் ஒன்றாக கலந்துள்ளதால், இந்த பாதிப்பு இன்னொரு பேரலையை உருவாக்குமா என்பது தொடர்பில் தற்போதே கணிக்க முடியாது எனவும், அதன் ஆபத்து தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் நாட்டில் நான்காவது தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், நோய் தொற்றும் ஆபத்துள்ளவர்களுக்கு முதற்கட்டமாக செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.