FlyDubai விமானத்தில் இந்திய விமானியை தாக்கியவர் இவர்தான்
Flydubai's Omani co-pilot, identified: FlyDubai விமானத்தில் இந்திய விமானியை தாக்கியவர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட Flydubai நிறுவன விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, விமானிகளில் ஒருவர், விமானத்தை தரையில் மோத முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

அதை தடுக்க முயன்ற இந்திய விமானியைத் தாக்கிய அந்த நபர் ஓமான் நாட்டவர் என்னும் தகவல் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில், தற்போது அவரது புகைப்படம் முதலான விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்திய விமானியை தாக்கியவர் இவர்தான்
துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட Flydubai நிறுவன விமானம் சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென, விமானத்தை தரையில் மோதவைக்க முயன்றுள்ளார் விமானிகளில் ஒருவர்.
அந்த விமானத்தின் விமானியும், இந்தியருமான ஸ்மித் (Captain Smit Machchhar) அதை தடுக்க முயல, அவரை கோடரி ஒன்றினால் சரமாரியாகத் தாக்கியுள்ளார் அவரது சக விமானி.

இந்நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் இஸ்ரேல் ஊடகங்கள், தாக்குதல் நடத்திய அந்த நபர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளன.
விமானத்தைத் தரையில் மோதி, 180 பேரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற அந்த நபருடைய பெயர் ஹமாம் அல் ஹமாமி.

ஓமான் நாட்டவரான தந்தைக்கும் சிரியா நாட்டவரான தாய்க்கும் பிறந்த அல் ஹமாமி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்தவர்.
பல ஆண்டுகள் அமீரகத்தில் வாழ்ந்த அல் ஹமாமி, ஓமான் ஏர் விமான நிறுவனத்தில் ஏழு ஆண்டுகளும், பின் மொராக்கோ விமான நிறுவனம் ஒன்றில் சில மாதங்களும் வேலை செய்துள்ளார்.
தீவிரவாத கருத்துக்கள் காரணமாக அல் ஹமாமி ஓமான் விமான நிறுவன வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அல் ஹமாமால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையிலும், விமானத்தின் விமானியான கேப்டன் ஸ்மித், விமானிகளின் அறையைத் திறக்க, பயணிகள் உள்ளே நுழைந்து தாக்குதல்தாரியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால், 180 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.