பழைய சப்பாத்தியை காலை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்: சர்க்கரை நோயாளிகள் கவனிக்க வேண்டிய உணவு
பழைய சப்பாத்திகளை சாப்பிடுவதால் அதில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் நமது உடலுக்கு வலு சேர்க்கிறது.
பழைய சப்பாத்தியில் உள்ள நன்மைகள்
பழைய சாதம் உடலுக்கு குளிர்ச்சி தரும், அதைப்போல் நேத்து சுட்ட பழைய சப்பாத்திகளை இன்று சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும் என்றால் நம்ப முடியவில்லை.
ஆமாம், நேத்து சுட்ட பழைய சப்பாத்திகளில் நேரம் செல்ல செல்ல அதில் ரெஸிஸ்டண்ட் ஸ்டார்ச் என்பது அதிகரிக்கிறது. இதில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள உதவுகிறது.
இரவில் ப்ரீஸ் செய்த இந்த சப்பாத்திகளில் உடலுக்கு ஆரோக்கியம் ஊட்டும் குடல் மைக்ரோ பயோட்டா அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்படி சாப்பிட வேண்டும்
இரவில் ப்ரீஸ் வைத்த வைத்த சப்பாத்தியை அடுத்த நாள் காலையில் பாலில் ஊற வைத்து சாப்பிடலாம். இவை உங்கள் உணவின் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கும்.
சப்பாத்தியில் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருப்பதால் காய்கறிகள் மற்றும் புரதத்துடன் இணைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
ஆனால் இவற்றில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் 12-15 மணி நேரத்திற்குள் சாப்பிடுவது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Chapati, roti, healthy food, diabetics, sugar patients, wheat, protein