62 வயது முதியவரை கரம்பிடிக்கும் 23 வயது இளம்பெண்: டேட்டிங் அப்பில் மலர்ந்த காதல்
அமெரிக்காவில் டேட்டிங் ஆப் மூலம் பழகிய 23 வயது பெண்ணும் 62 வயது முதியவரும் விரைவில் காதல் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
காதலுக்கு வயது இல்லை
காதலுக்கு ஜாதி, மதம், இனம், நிறம், வயது ஆகியவை தெரியாது என்று சொல்வார்கள், இந்த கூற்றை மெய்யாக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, வயது வித்தியாசத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் காதல் செய்து வருகின்றனர்.
இந்த காதல் கதையானது அமெரிக்காவில் மாடல் அழகியாக பணிபுரியும் வில்லோ(23) என்ற இளம் பெண்ணும், வடக்கு கரோலினாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் டேவிட்(62) என்பவருக்கும் இடையே மலர்ந்துள்ளது.
டேட்டிங் செயலி மூலம் பழக இருவரும் நீண்ட நாட்களாக பேசி பழகி வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் நேரில் சந்தித்து டேட்டிங் செய்துள்ளனர்.
வில்லோவுக்கு 23 வயது, டேவிட்க்கு 62 வயது என இருவருக்கும் இடையே சுமார் 40 வயது இடைவெளி இருப்பினும், டேட்டிங்கின் போது இருவருக்கும் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தாங்கள் காதலிப்பதாக உலகிற்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வில்லோ ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், டேவிட்டிற்கு வயது அதிகம் என்றாலும், அவர் ஆற்றல் கொண்டவர், அவருடன் சரிசமமாக இருக்க நான் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
காசாவில் 10% மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் பலியானது இப்படி தான்! இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
இந்த ஜோடி தற்போது இணைந்து பல பகுதிகளுக்கும் சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர்.
இவர்களது காதலுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், அதை பொருட்படுத்தாமல் இருவரும் காதலித்து வருகின்றனர், அத்துடன் விரைவில் திருமணமும் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
62 years old man marries 23 years women in us, love story, marriage, wedding, relationship, love affair, love, couples,