உக்ரைன் - ரஷ்யா போரினால் 40 மில்லியன் மக்களுக்கு நேரவுள்ள கதி! எச்சரிக்கை தகவல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உணவு மற்றும் எரிசக்திக்கான விலை உயர்ந்து அதன்மூலம் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தீவிர வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தகவலை உலகளாவிய மேம்பாட்டு மையம் எனப்படும் Center for Global Development (CGDEV) வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதி உலக கோதுமை ஏற்றுமதியில் கால் பங்கிற்கும் அதிகம் என்றும், இதனை இறக்குமதி செய்யும் நாடுகள் மாற்றுப் பொருட்களுக்கு போட்டியிடுவதால் உணவுப் பொருட்களின் விலை உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி முகமைகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான தேவைகளின் தெளிவான அதிகரிப்புக்கு விரைவாக பதிலளிக்க வேண்டும்.
அதே நேரத்தில் பணக்கார அரசாங்கங்கள் வரவிருக்கும் உணவு நெருக்கடிக்கு முன்கூட்டியே கூடுதல் நிதியை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.