ஈரான் போரால் பிரித்தானியாவில் உணவுப்பொருட்கள் விலை உயரும் அபாயம்

United Kingdom Iran-US Conflict
By Balamanuvelan Mar 30, 2026 06:00 AM GMT
Report

ஈரான் போர் உலக நாடுகள் மீது எதிர்பாராத பல தாக்கங்களை ஏற்படுத்திவருகிறது.

விலை உயர்ந்துள்ளது எரிபொருட்கள் மட்டுமல்ல, இனி உணவுப்பொருட்கள் விலையும் உயரும் அபாயம் உள்ளது என்கிறார்கள் பிரித்தானிய வேளாண் துறையினர்.

உணவுப்பொருட்கள் விலை உயரும் அபாயம்

ஆம், பழைய காலங்களைப்போல விவசாயிகள் இலை தழைகளையும், மாட்டுச் சாணத்தையும் மட்டும் உரமாகப் போட்டு பயிர் செய்வதில்லை இப்போது.

இன்றைய காலகட்டத்தில் பெருமளவிலான விவசாயம், ரசாயன உரங்களை நம்பித்தான் உள்ளது. 

ஈரான் போரால் பிரித்தானியாவில் உணவுப்பொருட்கள் விலை உயரும் அபாயம் | Food Prices To Rise In Uk By Ongoing Iran War

விடயம் என்னவென்றால், ரயாயன உரம் தயாரிக்க அடிப்படையும் இயற்கை எரிவாயுதான். ஆக, ஈரான் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, எரிபொருட்களை மட்டுமல்ல, உரங்கள் மீதும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.

எப்படி உலகின் கச்சா எண்ணெயில் 20 சதவிகிதம் ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக கொண்டுவரப்படுகிறதோ, அதேபோல, 30 சதவிகித யூரியா அல்லது அமோனியம் நைட்ரேட் என்னும் உரங்களுக்கான அடிப்படை ரசாயனமும் வளைகுடா நாடுகள் வழியாகத்தான் வருகிறது.

ஆக, முன்பின் யோசிக்காமல் ட்ரம்ப் துவக்கிய ஈரான் போரால் ஹோர்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள விடயத்தால் பாதிக்கப்பட்டுள்ளது எண்ணெய் போக்குவரத்து மட்டுமல்ல, உரத்துக்கான ரசாயன போக்குவரத்தும்தான்! 

எரிபொருள் பற்றாக்குறை அச்சம்..பிரித்தானியாவை மீண்டும் அந்த பணிக்கு திரும்பச் செய்வேன் - கன்சர்வேடிவ் எம்.பி

எரிபொருள் பற்றாக்குறை அச்சம்..பிரித்தானியாவை மீண்டும் அந்த பணிக்கு திரும்பச் செய்வேன் - கன்சர்வேடிவ் எம்.பி

பிரித்தானியாவைப் பொருத்தவரை, ட்ரினிடாட் தீவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் யூரியா அமோனியா நைட்ரேட், சுந்தர்லேண்ட் வழியாக வடகடலை அடைந்து, கடைசியாக இங்கிலாந்திலுள்ள நார்ஃபோல்க்கை வந்தடைகிறது.

ஆக, உரம் வருவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், இந்த ஆண்டு ஜனவரியில் டன் ஒன்றிற்கு 300 டொலர்களாக இருந்த யூரியா விலை இரண்டே மாதங்களில், அதாவது, மார்ச் மாத இறுதிவாக்கில் 700 டொலர்களாக உயர்ந்துள்ளது.

அப்படியானால், விவசாயிகள் சுமார் இரண்டு மடங்கு பணம் கொடுத்து உரம் வாங்கவேண்டும். அந்த கூடுதல் செலவு நுகர்வோரை வந்தடையும் அபாயம் உள்ளது. அல்லது, யூரியா இல்லாமலே விவசாயம் செய்யவேண்டியதுதான். 

ஈரான் போரால் பிரித்தானியாவில் உணவுப்பொருட்கள் விலை உயரும் அபாயம் | Food Prices To Rise In Uk By Ongoing Iran War

அப்படிச் செய்தால், விளைச்சல் குறைந்துவிடும். எது நடந்தாலும், உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பைத் தடுக்க முடியாது.

மேலும், ஆடுமாடுகளுக்கான வைக்கோல் குறைவான அளவே உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். ஆக, இறைச்சிக்கும் பிரச்சினை ஏற்படலாம்.

காய்கறிகளை விளைவிக்க உதவும் கண்ணாடி இல்லங்களை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள எரிவாயுவும், தாவரங்களுக்கு உரமும் தேவை.

ஆக, எரிவாயு பற்றாக்குறை, உர விலை உயர்வு என, ஈரான் போர் ஏற்படுத்திவரும் தாக்கம், கடைசியாக, உணவுப்பொருட்கள் விலை உயர்வில் போய் முடியப்போகிறது என்கிறார்கள் சம்பந்தப்பட்ட துறையினர்! 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US