எரிபொருள் பற்றாக்குறை அச்சம்..பிரித்தானியாவை மீண்டும் அந்த பணிக்கு திரும்பச் செய்வேன் - கன்சர்வேடிவ் எம்.பி
பிரித்தானியாவில் குடும்பங்களின் எரிசக்தி கட்டணத்தில் ஆண்டுக்கு 200 பவுண்ட்கள் சேமிக்க உதவுவதாக கன்சர்வேடிவ் எம்.பி சபதம் செய்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை
ஈரான் மோதல் காரணமாக விலையேற்றமும், எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படும் அச்சம் பிரித்தானியாவில் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கன்சர்வேடிவ் எம்.பி கெமி பட்னோச், Aberdeen-க்கு வருகை தந்தபோது எண்ணெய் மற்றும் எரிவாயு குறித்த திட்டத்தைப் பற்றி கூறினார்.
அவர், பிரித்தானியாவை எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடும் பணிகளுக்குத் திரும்ப செய்யும் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
இதன்மூலம் குடும்பங்களின் எரிசக்தி கட்டணத்தில் ஆண்டுக்கு 200 பவுண்ட் சேமிக்க உதவுவதாக அவர் உறுதியளிக்கிறார்.
மானியம்
அவரது மலிவான மின்சாரத் திட்டம், நலத்திட்ட உதவிகளைப் பெறுபவர்களுக்கு மானியம் வழங்குவதற்காக, நடுத்தர வர்க்கத் தொழிலாளர்கள் மீது மீது தொழிலாளர் கட்சி செலுத்தும் 'பயங்கரமான' அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வட கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடும் பணிகளை மீண்டும் தொடங்குமாறு அவர் இதன்மூலம் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
டோரி கட்சியின் எரிசக்தித் திட்டத்தின் கீழ், சராசரி குடும்பத்திற்கு ஆண்டுக்கு 94 பவுண்ட் சேமிப்பதற்காகக் கட்டணங்களில் இருந்து மதிப்புக்கூட்டு வரி (VAT) நீக்கப்படும்.
75 பவுண்ட் சேமிப்பதற்காக கார்பன் வரி ரத்து செய்யப்படும் மற்றும் 22 பவுண்ட் சேமிப்பதற்காகக் காற்றாலை மானியங்கள் கைவிடப்படும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |