ஏவுகணை தாக்குதலில் வெடித்து சிதறிய உக்ரைன் விமான நிலையம்! வெளியான பரபரப்பு வீடியோ
உக்ரைனில் உள்ள விமான நிலையம் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் உள்ள விமான நிலையம் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
புடின் உத்தரவை தொடர்ந்து ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது ஒரு பெரிய இராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
முக்கிய நகரங்களுக்கு அருகே ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
உக்ரைனில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை கைப்பற்ற ரஷ்ய படைகள் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைனின் Ivano-Frankivsk நகரில் உள்ள விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், ஏவுகணை ஒன்று மின்னல் வேகத்தில் விமான நிலையத்தின் மீது தாக்கி வெடித்து சிதறுகிறது.
இதைக்கண்ட சம்பவயிடத்தில் இருந்த மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பீதியில் உறைந்து நிற்பதை வீடியோ காட்டுகிறது.
❗️Footage of the bombing of the airport in Ivano-Frankivsk. pic.twitter.com/o1X6G5zRJk
— NEXTA (@nexta_tv) February 24, 2022