பிரித்தானியாவில் நீரில் மூழ்கிய 19 வயது இளைஞர்: படம் பிடித்த நண்பர்கள்
Footage shows panashe muchenje who died in england: பிரித்தானியாவில் 19 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் ஒருநாள் பயணத்தின்போது 19 வயது இளைஞர், ஏரியில் குதித்த பின் நீரில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.
19 வயது இளைஞர்
கடந்த மே 28ஆம் திகதி நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள நியூவார்க்கிற்கு 19 வயது இளைஞரான பனஷே முசெஞ்சே நண்பர்களுடன் சென்றுள்ளார்.

ஒருநாள் பயணமான சென்ற பின், அங்குள்ள ஏரியில் அனைவரும் இறங்கி நீராடி விளையாடியுள்ளனர். அப்போது முசெஞ்சே காணாமல் போயுள்ளார்.
இதுகுறித்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முசெஞ்சே உணர்வற்ற நிலையில் வெளியே கொண்டுவரப்பட்டார்.
அங்குவந்த மருத்துவக்குழு தீவிர முயற்சிகள் மேற்கொண்ட பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், மே 30ஆம் திகதி அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார்.
இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முசெஞ்சேயின் இறப்பிற்கான காரணம் நீரில் மூழ்கியது என்று மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
விசாரணை மன்றத்தில்
ஏரியைச் சுற்றியுள்ள தற்போதைய எச்சரிக்கைப் பலகைகளை மேம்படுத்த உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 19 வயது பல்கலைக்கழக மாணவரான முசெஞ்சே உயிரிழந்த தருணத்தை, அவரது நண்பர்கள் தற்செயலாக படம்பிடித்தனர் என்று விசாரணை மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனாஷே முசெஞ்சே தண்ணீரின் அருகே சிரித்துக் கொண்டிருப்பதை அந்தக் காணொளி காட்டுகிறது.
புல்வெல் என்ற இடத்தில் ஒரு நண்பரால் அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவர் பால்டர்டன் ஏரிக்கு சென்றதாகவும், அங்கு பிற்பகல் 1.30 மணிக்கு சற்று பிறகு அவர்கள் காரில் இருந்து இறங்கியதாகவும் விசாரணை மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
