இந்தியா வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கருத்து
இந்தியாவுக்கு கால்பந்து விளையாட வருவது குறித்து பிரபல நட்சத்திர வீரர் மெஸ்ஸி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இந்தியா வரும் மெஸ்ஸி
இந்த ஆண்டு டிசம்பர் 13ம் திகதி உலகின் முன்னணி கால்பந்து வீரராக அறியப்படும் லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வரவுள்ளார்.
இந்தியா வரும் மெஸ்ஸி கொல்கத்தா, அகமதாபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறும் கால்பந்து போட்டியில் கலந்து கொள்கிறார்.
மேலும் டிசம்பர் 15ம் திகதி இந்திய பிரதமர் மோடியை மெஸ்ஸி சந்தித்து உரையாற்ற உள்ளார்.
மெஸ்ஸி நெகிழ்ச்சி
இந்நிலையில், இந்தியா வருவது குறித்து மெஸ்ஸி தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், இந்தியா கால்பந்து ஆர்வமுள்ள நாடு, இந்திய ரசிகர்கள் மிகவும் அற்புதமானவர்கள், இளம் தலைமுறை கால்பந்து ரசிகர்களை காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.
மேலும் இந்தியாவுக்கு வருவதை மிகவும் கெளரவமாக நினைப்பதாகவும், 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த நல்ல நினைவுகள் இன்னும் தனது நினைவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |