இறந்த பின்பும் தாய்க்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்த பிரித்தானிய இளைஞர் எடுத்த துயர முடிவு
வளர்ந்துவரும் கால்பந்து விளையாட்டு வீரரான பிரித்தானிய இளைஞர் ஒருவர் திடீரென ஒருநாள் மாயமான நிலையில், மறுநாள் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது.
தூக்கில் தொங்கிய இளைஞர்
இங்கிலாந்திலுள்ள கென்டில் வாழ்ந்துவந்த Jay Carr (20), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காணாமல் போனார். அவரைத் தேடும் முயற்சியில் இறங்கிய பொலிசார், மறுநாள், அதாவது, 2022 செப்டம்பர் 20ஆம் திகதி, அவரது வீட்டுக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில், மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரைக் கண்டுபிடித்தார்கள்.
Credit: Facebook
அதிரவைக்கும் பின்னணி
விடயம் என்னவென்றால், மரணமடைந்த தன் தாய்க்கு நிகழ்ந்த ஒரு மோசமான விடயத்தைக் குறித்த செய்தி Jayக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே தாயை இழந்து மன நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மோசமான செய்தியைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார் அவர்.
Credit: Facebook
அது என்ன செய்தி?
அதாவது, Jayயின் குடும்பம் வாழ்ந்து வந்த அதே கென்டில் வாழ்ந்த Wendy Knell (25) மற்றும் Caroline Pierce (20) என்னும் இரண்டு இளம்பெண்கள் கொல்லப்பட்டு வன்புணரப்பட்டிருந்தார்கள்.
அந்த இரட்டைக் கொலையைச் செய்த David Fuller (68) என்பவர் கைது செய்யப்பட்டபின், அவரைக் குறித்த வேறொரு மோசமான செய்தி தெரியவந்தது.
ஆம், இரண்டு மருத்துவமனைகளில் பிணவறைகளில் வேலை செய்துவந்த David Fuller, அந்த பிணவறைகளில் வைக்கப்பட்டிருந்த பெண்களின் உயிரற்ற உடல்களுடன் உறவுகொள்வதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
Credit: Facebook
அப்படி அவர் குறைந்தது 101 பெண்களின் உடல்களை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
விடயம் என்னவென்றால், உயிரிழந்த பின்பும் David Fullerஆல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்களில் Jayயின் தாயும் ஒருவர்!
ஆக, ஏற்கனவே தன் தாயை இழந்ததால் மன நல பாதிப்பு அடைந்திருந்த Jay, தன் தாயின் உடலுக்கு நிகழ்ந்த மோசமான விடயம் தெரியவந்ததால், கடும் பாதிப்புக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |