பல மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் கால்பந்து பிரபலம்: அகதிகள் முகாமில் அவதிப்படும் குடும்பம்
ஆண்டுக்கு 5 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஜேர்மன் கால்பந்து பிரபலத்தின் தாயாரும் உடன்பிறப்புகளும் தற்போதும் அகதிகள் முகாமில் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக கால்பந்து பார்வையாளர்களை
18 வயது என குறிப்பிட்டு கால்பந்து உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட Youssoufa Moukoko, அறிமுகமான தொடரிலேயே பல சாதனைகளை நிகழ்த்தி உலக கால்பந்து பார்வையாளர்களை தமது பக்கம் திருப்பினார்.
Image: Newsflash
ஆனால், அவரை தத்தெடுத்த தந்தை வெளியிட்ட பிறப்பு சான்றிதழில், அவர் 2000ல் பிறந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது முதன்முறையாக ஜேர்மன் நாளேடு ஒன்று, அவரது தாயார் 35 வயதான Marie Moukoko மற்றும் மகள், மகனுடனான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அவர்கள் தற்போதும் அகதிகள் முகாமில் அவதிப்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
ஜேர்மனியின் Borussia Dortmund என்ற கால்பந்து அணியில் இணைந்து ஆண்டுக்கு 5.1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் Youssoufa Moukoko தமது தாயாருக்கு வீட்டு வாடகைக்கான தொகையைக் கூட அளிப்பதில்லையாம்.
மகனை விமர்சிக்க மறுக்கும் தாயார்
அதனாலையே அவர்கள் அகதிகள் முகாமை நாடியுள்ளதாக அந்த பிரபல நாளேடு குறிப்பிட்டுள்ளது. மட்டுமின்றி, அவர்கள் தங்கியிருந்த 3,767 சதுர அடி வில்லா ஏலத்திற்கு விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Image: Newsflash
கடன் தொகை 442,277 பவுண்டுகளை எட்டிய நிலையில் Marie Moukoko பெயரில் இருந்த அந்த வில்லாவானது ஏலத்தில் வைக்கப்பட்டதுடன், இவர்கள் வெளியேறும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பல மில்லியன் சம்பாதிக்கும் தமது மகனை விமர்சிக்க மறுக்கும் அந்த தாயார், எனக்கு 6 பிள்ளைகள், நான் ஒரே பிள்லையை மட்டும் பெற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |