Dating App பயன்படுத்திய கால்பந்தாட்ட வீரர்., ஒப்பந்தத்தை ரத்து செய்த துருக்கி கிளப்
டேட்டிங் செயலியைப் பயன்படுத்தியதற்காக துருக்கிய கால்பந்தாட்ட வீரர் தனது ஒப்பந்தத்தை இழந்துள்ளார்.
இந்த டிஜிட்டல் யுகத்தில், ஒருவர் சமூக ஊடக App-களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது எதாவது வகையில் நமக்கு பெரும் பிரச்சினையை கொண்டுவந்துவிடும்.
துருக்கியைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர் எமிர்ஹான் டெலிபாஸ் (Emirhan Delibas) சமீபத்தில் இதை அனுபவித்தார்.
ஆம், டேட்டிங் ஆப் ஒன்றை பயன்படுத்தியதன் விளைவாக கால்பந்து கிளப் அவரை அணியிலிருந்து நீக்கியது. அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
Dating App-ஐ பயன்படுத்தியதற்காக அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதா? என ஆச்சரியப்பட வேண்டாம். உண்மை விடயம் தெரிந்தால் அவருக்கு இந்த தணடனை தேவைதான் தோன்றலாம்.
தற்போது Beşiktaş J.K. கிளப்பில் விளையாடி வரும் எமிர்ஹானுக்கு 21 வயது.
ஆனால், டேட்டிங் செயலியான தனது Tinder சுயவிவரத்தில் தனக்கு 24 வயது என்று எழுதியுள்ளார்.
இதை அறிந்த பெசிக்டாஸ் கிளப், இந்த இளம் கால்பந்து வீரர் தனது வயதை மறைத்ததை தீவிரமாக எடுத்துக் கொண்டது.
எமிர்ஹானின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால், இந்த இளம் கால்பந்து வீரர் கடும் நெருக்கடிக்கு ஆளானார்.
2022-ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் பெசிக்டாஸ் கிளப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய எமிர்ஹான், 2023-24 சீசனில் ஒரே ஒரு லீக் போட்டியில் தான் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Football Club, Turkiye, Tinder Dating App, Emirhan Delibas, Beşiktaş J.K. Football club, Sports News