18 மாதங்களாக 2 சிறுமிகள் கூட்டு வன்கொடுமை! கர்ப்பத்தினால் பெற்றோர் அதிர்ச்சி
அக்கா, தங்கையான இரண்டு சிறுமிகளை 2 பேர் 18 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகள் பாலியல் பலாத்காரம்
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள ஆல்வாரில் பண்ணை வீடுகளில் உள்ள ஆடு, மாடுகளை பராமரிப்பதற்காக சிலர் குடும்பங்களுடன் தங்கி இருந்தனர். அதில், ஒரு குடும்பம் இரண்டு மகள்களுடன் இருந்தனர்.
அப்போது, அவர்களுடைய இரண்டு மகள்களில் ஒருவர் வயிறு வலிப்பதாக கூறினார். அப்போது, அந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது மட்டுமல்லாமல் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பண்ணை வீட்டில் உள்ள இரண்டு ஊழியர்களால் 18 மாதங்களாக பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமி கூறினார்.
மேலும், தன்னை மட்டுமல்லாமல் தங்கையையும் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறினார். இதனையடுத்து, சிறுமியின் தங்கையை விசாரித்த போது உண்மை தெரிய வந்துள்ளது. மேலும், அந்த சிறுமியும் கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால், அவர்களது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொலிசார் விசாரணை
இச்சம்பவம் குறித்து சிறுமிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்கள் மீது போக்சோ பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருவதாக, ஆல்வார் மாவட்ட எஸ்.பி ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |