1.5 மில்லியன் வாகனங்களை திரும்ப பெறும் Ford: பிண்ணனியில் உள்ள பாதுகாப்பு காரணம்
கேமரா கோளாறு காரணமாக ஃபோர்டு நிறுவனம் சுமார் 1.5 மில்லியன் வாகனங்களை திரும்ப பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை திரும்ப பெறும் Ford Company
ஃபோர்டு மோட்டார் கம்பெனி(Ford Motor Company) தங்களுடைய வாகனங்களின் பின்பக்க கேமராவில் குறைபாடு இருப்பதாக எழுந்த சர்ச்சை தொடர்ந்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அந்த முடிவில், ஃபோர்டு நிறுவனம் அமெரிக்காவில் உள்ள சுமார் 1.5 மில்லியன் போர்டு வாகனங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
புதன்கிழமை அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் வெளியிட்ட ஆவணங்களில், வாகனங்கள் பின்னோக்கி எடுக்கும் போது, அதன் கேமராக்களின் காட்சிகள் மங்கலாகவும், விட்டுவிட்டுத் தோன்றுவது உண்டாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காட்சி குறைபாட்டின் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து கணிசமாக அதிகரிப்பதை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வாகனங்களின் பட்டியல்
Ford Flex (2015-2019), Ford Explorer, Lincoln MKT மற்றும் Lincoln MKZ - (2015), Ford C-Max, Ford Escape மற்றும் Ford Taurus (2015 - 2016).
Ford Fusion (2016), Ford Taurus (2018 - 2019), Lincoln MKT மற்றும் Ford Fiesta (2019), Ford Mustang (2020) மேல் பட்டியலிடப்பட்ட வாகனங்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களை ஃபோர்டு நிறுவனம் நேரடியாக தொடர்பு கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேமரா குறைபாடு இருந்தால் அவற்றை டீலர்கள் சோதனை செய்து கேமராவை மாற்றித் தருவார்கள் எனவும், இந்த சேவையை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக செய்து தருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |