பிரித்தானியாவில் மஞ்சள் வானிலை எச்சரிக்கை: பயணங்களை பாதுகாப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தல்
பிரித்தானியாவில் டேவ் புயல் அச்சுறுத்தலை தொடர்ந்து ஈஸ்டர் பயணங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டேவ் புயல்( Storm Dave) காரணமாக பிரித்தானியா முழுவதும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பயணங்கள் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை எச்சரிக்கை விவரம்
வானிலை தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 7 மணி வரை வடக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 2 மணி முதல் நாளை அதிகாலை 3 மணி வரை வடக்கு அயர்லாந்து பகுதியிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் நாளை நண்பகல் 12 மணி வரை காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து மழை பகுதிகளில் பலத்த மழையும், பனி பொழிவும் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதிப்புகள்
சாலை போக்குவரத்து, ரயில், விமான போக்குவரத்துகள் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்கரைகளில் ராட்சத அலைகள் எழும்பலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திறந்த பகுதிகளில் காற்றின் வேகம் 90 மணி வேகத்தில் இருக்கும் என்றும், பொதுவாக 50 முதல் 70 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |