இலங்கையை உலுக்கிய பேரிடர்: மீட்க களமிறங்கும் பல சர்வதேச நாடுகள்
பேரிடர் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவி செய்ய பல நாடுகள் முன்வந்துள்ளன.
உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா
இலங்கையில் வெள்ளம் மற்றும் பேரிடர் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில், அமெரிக்கா இரண்டு விமானங்களில் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.

இதற்காக அமெரிக்கா தங்களுடைய இரண்டு C1 30 சரக்கு விமானங்களை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மீட்பு பணிகளுக்காக பல ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கி இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
சர்வதேச அமைப்புகள் உதவி
டித்வா புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக இலங்கை மிகவும் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது, இருப்பினும் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களை பாதுகாக்க பல சர்வதேச அமைப்புகள் உதவ வந்துள்ளதாக சம்பத் கொட்டுவேகொட குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் பல நாட்டு அதிகாரிகள் மீட்பு பணிகள் மற்றும் உதவிகள் தொடர்பாக தொடர்ந்து பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு பிரான்ஸ், போலந்து, ஜெர்மனி மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தந்து, நாட்டு மக்களுக்கு தேவையான உதவியை வழங்க தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |