இந்தியாவில் வெளிநாட்டு நாய்கள் விற்பனைக்கு தடை! காரணம் என்ன? முழுமையான பட்டியல்
இந்தியாவில் வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு இன நாய்களுக்கு இந்தியாவில் தடை
இந்திய அரசாங்கம் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டு இன நாய்களை இறக்குமதி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது.
இந்த தடையில், பிட்புல், ரோத்வீலர், புல்டாக் உல்ஃப் போன்ற ஆக்ரோஷமான இன நாய்களை உள்ளடக்கி உள்ளது.
தடைக்கான காரணங்கள்
இந்த தடைக்கான முக்கிய காரணம், இந்த வெளிநாட்டு இன நாய்கள் ஆக்ரோஷமானவை மற்றும் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவை என்பதாகும்.
சமீபத்திய ஆண்டுகளில், ஆக்ரோஷமான நாய் தாக்குதல்கள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்ததையும், விலங்கு நலக் குழுக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளையும் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து பட்டியலிடப்பட்டுள்ள நாய் இனங்களின் இறக்குமதி, இனப்பெருக்கம், மற்றும் விற்பனைக்கு தடை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை, இந்த இனங்களின் கலப்பு இனங்களையும் உள்ளடக்கியது.
ஏற்கனவே இந்த இனங்களை வளர்க்கும் செல்லப்பிராணிகள் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன, ஆனால் மேலும் இனப்பெருக்கத்தை தடுப்பதற்காக, விலங்கு கருத்தடை திட்டங்களை ஆராய மாநிலங்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தடை செய்யப்பட்ட நாய் இனங்கள் (Banned Dog Breeds)
- பிட்புல் டெரியர் (Pitbull Terrier)
- டோசா இனு (Tosa Inu)
- அமெரிக்கன் ஸ்டாஃப்ஃபோர்ட்ஷயர் டெரியர் (American Staffordshire Terrier)
- ஃபிலா பிரசிலிரோ (Fila Brasileiro)
- டோகோ அர்ஜெண்டினோ (Dogo Argentino)
- அமெரிக்கன் புல்டாக் (American Bulldog)
- போயஸ்போல் (Boesboel)
- காங்கல் (Kangal)
- மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய் (Central Asian Shepherd Dog)
- காக்கேசிய ஷெப்பர்ட் நாய் (Caucasian Shepherd Dog)
- தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய் (South Russian Shepherd Dog)
- டோர்னஜாக், சார்ப்ளானினாக் (Tornjak, Sarplaninac)
- ஜப்பானிய டோசா மற்றும் அகிதா (Japanese Tosa and Akita)
- மாஸ்டிஃப் (Mastiffs)
- ராட்வெய்லர் (Rottweiler)
- டெரியர்கள் (Terriers)
- ரோடேஷியன் ரிட்ஜ்பேக் (Rhodesian Ridgeback)
- ஓநாய் நாய்கள் (Wolf Dogs)க
- னாரியோ (Canario)
- அக்பாஷ் (Akbash)
- மாஸ்கோ காவல் நாய் (Moscow Guard Dog)
- கேன் கோர்சோ (Cane Corso)
- பேன்நாய்(Bandog)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
ban on foreign dog breeds in india, import ban on foreign dogs in india, sale ban on foreign dogs in India, list of banned foreign dog breeds in india, an Indian government ban on foreign dogs, why ban on foreign dog breeds in India?,foreign dog breeds banned in India news, latest news on ban of foreign dogs in India, exceptions to ban on foreign dog breeds in india, controversy over ban on foreign dogs in India,