பொலிஸ் காவலில் உயிரிழந்த வெளிநாட்டவர்: பரபரப்பு பின்னணி
Foreigner dies in detention; வெளிநாட்டவர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்தார்.
இந்தியாவில் வெளிநாட்டவர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் மும்பையிலிருந்து டெல்லி செல்லும் ரயில் ஒன்றில், 45 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவர் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.
வாக்குவாதமும் கைதும்
பயணத்தின்போது அந்த வெளிநாட்டவருக்கும் சக பயணிகளுக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த ரயில்வே பாதுகாப்பு பொலிசார் அங்கு வந்து அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.
ஆனால், அவர் சமாதானமாகவில்லையாம், மேலும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளத் துவங்கினாராம்.
ஒரு கட்டத்தில், தீயணைப்பு இயந்திரத்தை எடுத்து பயணிகள் மீது அவர் ஸ்பிரே செய்ய, ரயில் பெட்டியில் பதற்றம் உருவாகியுள்ளது. சில பயணிகள் அவரைத் தாக்கியுள்ளார்கள்.
பிரச்சினை வலுப்பதைக் கண்ட பொலிசார், அவரை சூரத் ரயில் நிலையத்தில் இறக்கி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
அவரிடம் பொலிசார் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே அந்த வெளிநாட்டவர் மயங்கிச் சரிந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் பாஸ்போர்ட், விசா என எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில், அவர் யார், எந்த நாட்டவர் என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஒருபக்கம் பொலிசார் இறங்க, அவர் எதனால் திடீரென உயிரிழந்தார் என்பதை அறியும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |