போலி ஆவணங்களுடன் இலங்கைக்குள் நுழைந்த வெளிநாட்டவர்: நாடு கடத்திய அதிகாரிகள்
போலி பாஸ்போர்ட் மற்றும் போலிய இதர ஆவணங்களுடன் இலங்கை வந்த செனகல் நாட்டவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களுடன் வந்த வெளிநாட்டவர்
போலி பிரேசிலிய நாட்டின் கடவு சீட்டை பயன்படுத்தி இலங்கை நாட்டுக்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டை சேர்ந்த நபர் இன்று(23) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரை உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 35 வயது செனகல் நாட்டை சேர்ந்த சந்தேக நபர் இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-218 மூலம் கத்தாரின் தோஹாவிலிருந்து இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை 05.45 மணிக்கு வந்து இறங்கியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய செனகல் நாட்டு இளைஞரின் கடவுச்சீட்டு குறித்து சந்தேகம் அடைந்த குடிவரவு அதிகாரிகள் உடனடியாக எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஆவணங்களுடன் விசாரணைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் ஆவணங்கள் மீது நடத்திய தொழில்நுட்ப சோதனைகளில் செனகல் நாட்டு இளைஞரின் கடவுச்சீட்டு போலியான பிரேசிலிய கடவுச்சீட்டு என்பதை கண்டறிந்தனர்.
மேலும் சந்தேக நபரின் உடமைகளை சோதனையிட்ட போது, அவரிடம் உண்மையான செனகல் நாட்டின் கடவுச்சீட்டு இருப்பதும், அத்துடன் நேபாளத்தின் காத்மாண்டுவுக்கான விமான டிக்கெட் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் வந்த கத்தாரின் தோஹாவிற்கே அவரை திரும்ப நாடு கடத்த இலங்கை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |