கனடாவிலிருந்து பயணிக்கும் வெளிநாட்டினர் இந்த நாட்டுக்குள் நுழைய தற்காலிக தடை
கனடாவிலிருந்து பயணிக்கும் வெளிநாட்டினர் சீனாவுக்குள் நுழைய அந்நாடு தற்காலிக தடை விதித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சீன வாழிட உரிமம் வைத்திருப்பவர்கள் உட்பட, வெளிநாட்டவர்கள், வேலை காரணமாக என்றாலும் சரி, தனிப்பட்ட காரணங்களுக்காக என்றாலும் சரி, கனடாவிலிருந்து சீனாவுக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் diplomatic மற்றும் service விசா வைத்திருப்போர் எவ்விதத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று மட்டுமே கனடாவில் 4,255 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை கனடாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 19,942 ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.