சிலியில் பற்றி எரியும் காட்டுத்தீ., 51 பேர் பலி
தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. அதிக வெப்பம் காரணமாக தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.
சுமார் 1,100 வீடுகள் எரிந்து நாசமானது. பாரிய தீயினால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நிவாரணப் பணிகளை மேற்கொள்பவர்கள் ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி Gabriel Boric வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Reuters
Valparaiso பகுதியில் பெரும் தீவிபத்தில் இருந்து அடர்ந்த புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.
மத்திய சிலியில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான காலநிலை இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Reuters
அதிக வெப்பம், பலத்த காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் காரணமாக தீ பரவுவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.
தீயின் தீவிரம் அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் மறுவாழ்வு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Reuters
Reuters
Reuters
Reuters
Reuters
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Chile Forest Fire, Chile News