Wifi பாஸ்வேர்டு மறந்துவிட்டீர்களா? இதனை எப்படி கண்டுபிடிக்கலாம்?
Technology
Wifi
Password
By Kishanthini
நம்மில் பலருக்கு அடிக்கடி Wifi பாஸ்வேர்டு மறந்து போவது வழக்கம். இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்போம்.
இச்சூழல்களில் ரவுட்டரை ரீசெட் செய்யாமல் பாஸ்வேர்டை கண்டறிய வழிமுறை இருக்கிறது.
குறிப்பாக சாதனத்தில் Wifi இணைக்கப்பட்டதில்லை எனில் அத்தோடு விண்டோஸ் அல்லது Mac சாதனத்துடன் வைபை இணைக்கப்பட்டிருந்தால் எளியமுறையில் பாஸ்வேர்டு கண்டறிய முடியும்.
அந்தவகையில் தற்போது எப்படி மறந்து போன Wifi பாஸ்வேர்டை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை பற்றி பாரப்போம்.
விண்டோஸ்
- Taskbar இருக்கும் விண்டோஸ் வைபை ஆப்ஷனை ரைட் க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி Open Network and Sharing center ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- அடுத்த திரையில் தோன்றும் ஆப்ஷன்களில் Change adapter settings ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி வைபை ஆப்ஷனை இருமுறை க்ளிக் (டபுள் க்ளிக்) செய்ய வேண்டும்.
- வைபை ஸ்டேட்டஸ் பக்கத்தில், Wireless Properties ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி செக்யூரிட்டி ஆப்ஷனில ஷோ பாஸ்வேர்டு (Show password) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
Mac
- வைபை ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி Open Network Preference ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து ஷோ பாஸ்வேர்டு (Show password) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
ஈத்தர்நெட் கேபிள் பயன்படுத்துவது
- விண்டோஸ் கம்ப்யூட்டரில் RJ45 கேபிளை இணைத்து ரவுட்டரின் கான்ஃபிகரேஷன் பக்கத்தை திறக்க வேண்டும்.
- லாக்-இன் விவரங்களை கவனமாக பதிவிட வேண்டும்.
- லாக்-இன் செய்ததும் வைபை ஆப்ஷனை க்ளிக் செய்து பாஸ்வேர்டு அல்லது செக்யூரிட்டி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி ஷோ பாஸ்வேர்டு (Show password) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US