ஐ நா அகதிகள் அமைப்பின் உயரிய விருது பெற்ற ஜேர்மன் முன்னாள் சேன்சலர்: விருதுக்கு தகுதியானவர் என்பதை மீண்டும் நிரூபித்தார்!
ஜேர்மனியின் முன்னாள் சேன்சலருக்கு ஐ நா அகதிகள் அமைப்பின் உயரிய விருது வழங்கப்பட்டது.
இந்த விருது, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வழங்கப்பட்டது.
ஜேர்மனியின் முன்னாள் சேன்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு ஐ நா அகதிகள் அமைப்பின் உயரிய விருது வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம், அதாவது, திங்கட்கிழமை, ஏஞ்சலாவுக்கு Nansen அகதி விருது என்னும் ஐ நா அகதிகள் அமைப்பின் உயரிய விருது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வழங்கப்பட்டது.
2015, 2016 அகதிகள் பிரச்சினையின்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகளுக்கு நாட்டைத் திறந்துவிட்டதற்காக தனக்கு அந்த விருது வழங்கப்பட்ட நிலையில், அந்த சமயத்தில் தனக்கு ஆதரவாக பின்னணியில் செயல்பட்ட அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார் அவர்.
அந்த விருக்கு அவர் தகுதியானவர்தான் என நிரூபிப்பதுபோல, தனக்கு விருதுடன் வழங்கப்பட்ட 150,000 டொலர்களை, அவருடன் கௌரவிக்கப்பட்ட நான்கு பேருக்கு நன்கொடையாக அளிப்பதாக அறிவித்தார் ஏஞ்சலா.