மன்மோகன் சிங் காலமானார்! இந்திய பிரதமர் மோடி உருக்கமான இரங்கல்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதை அடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் மறைவு
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார்.
92 வயதுடைய மன்மோகன் சிங் வயது மூப்பு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் வியாழக்கிழமை (டிச.26) இரவு 8.06 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் இரவு 9.51 மணிக்கு உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.
பிரதமர் மோடி இரங்கல்
இதையடுத்து மன்மோகன் சிங் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக X தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கலில், இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கை இழந்ததற்காக துக்கம் அனுசரிக்கிறது.
India mourns the loss of one of its most distinguished leaders, Dr. Manmohan Singh Ji. Rising from humble origins, he rose to become a respected economist. He served in various government positions as well, including as Finance Minister, leaving a strong imprint on our economic… pic.twitter.com/clW00Yv6oP
— Narendra Modi (@narendramodi) December 26, 2024
மிகவும் எளிமையான சூழ்நிலையில் இருந்து திறமையான பொருளாதார நிபுணராக, நாட்டின் நிதியமைச்சராக செயல்பட்டு பல ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தில் வலிமையான முத்திரையை பதித்துள்ளார்.
மன்மோகன் சிங் அவர்களின் நாடாளுமன்ற தலையீடுகள் சிறப்பு வாய்ந்தவையாக இருந்தன, நமது நாட்டின் பிரதமாக செயல்பட்ட போது நம்முடைய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டவர் மன்மோகன் சிங்.
நான் குஜராத்தின் முதல்வராகவும், அவர் நாட்டின் பிரதமராகவும் இருந்த போது தொடர்ந்து உரையாடியிருக்கிறோம், அவருடைய அறிவும் பணிவும் எப்போதும் வெளிப்படையானவை.
இந்த துயரமான நேரத்தில் மன்மோகன் சிங் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |