விஜய் கட்சியில் இணையவுள்ள முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.., யார் அவர்?
விஜய் கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் அவர்?
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கவுள்ளார். அதற்கான வேலைகளையும் தீவிரமாக செய்து வருகிறார்.
இதனால் பூத் கமிட்டி மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைய இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் கட்சியின் தலைவர் விஜயை நேரில் சந்தித்து இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இவருக்கு கட்சியில் இணை பொதுச்செயலாளர் அல்லது துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து ஆலோசனை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |