விடுதலையான பேரறிவாளன் எதிர்காலத்திற்கு.. அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை
விடுதலையான பேரறிவாளன் எதிர்காலத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கி இருப்பதற்கு காரணம் ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது தான் என குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், 'சரியான வகையில் தீர்மானம் இன்று நிறைவேற்ற பட்டு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் சொன்னால், அதிமுக அரசு சிறப்பான வகையில் செயல்பட்டு இருக்கிறது. இந்த விடுதலைக்கு முழு சொந்தக்காரர்கள் அதிமுக தான்.
பேரறிவாளன் போன்று மீதம் இருக்க கூடிய 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் பேரறிவாளனின் எதிர்காலத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்.
தமிழர்களின் குரலான, எழுவர் விடுதலை தான், எப்போதும் எங்களின் குரலாய் கேட்கும். பேரறிவாளன் விடுதலையில் உரிமை கொண்டாட திமுக-வுக்கு எவ்வித அருகதையும் இல்லை' என தெரிவித்துள்ளார்.