இல்லை இல்லை என்று சொல்லிவிட்டு அமெரிக்காவை நோக்கித் திரும்பும் ரிஷி சுனக்
ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமர் தேர்தலில் தோல்வியடைந்தால் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் சென்று குடியேறலாம் என வதந்திகள் வெளியாகின.
எதிர்பார்த்ததுபோலவே ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
அப்போதும், தான் அமெரிக்காவில் குடியமரப்போவதில்லை என்றே கூறினார் ரிஷி.
அமெரிக்காவை நோக்கித் திரும்பும் ரிஷி சுனக்
ஆனால், தற்போது ரிஷி அமெரிக்காவை நோக்கித் திரும்புவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
கலிபோர்னியாவில் வாழ்வதற்கு நெருக்கமாக ஒரு அடி எடுத்து வைத்துள்ளார் ரிஷி என பிரித்தானிய ஊடகமான தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள Stanford பல்கலையில் பகுதி நேர பணியாற்ற இருக்கிறாராம் ரிஷி.
என்றாலும், பல்கலையில் பணி செய்வதற்கு அவர் ஊதியம் எதையும் பெறப்போவதில்லையாம்.
பல்கலையில் பகுதி நேரப் பணி செய்துகொண்டே, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் ரிஷி தன் கடமையைத் தொடர இருப்பதாக தெரிவிக்கிறது சன் பத்திரிகை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |