மனைவியின் மரணத்தால் பிரம்மாண்ட வீட்டை விற்கும் பிரித்தானியர்! விலை எவ்வளவு தெரியுமா?
பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரர், மனைவியின் இறப்பினால் தனது ஆடம்பர வீட்டினை விற்கிறார்.
முன்னாள் கால்பந்து வீரர்
ஸ்கொட்லாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரர் அலெக்ஸ் பெர்குசன். ஓய்வுக்கு பின்னர் அணி மேலாளராகவும் இவர் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி கேத்தி (Cathy) சில வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு திருமணமாகி 57 ஆண்டுகள் ஆன நிலையில், மூன்று மகன்கள் மற்றும் 12 பேரக்குழந்தைகள் உள்ளனர்.
SNS Group
தனது மனைவியின் மறைவால் சோகத்தில் மூழ்கிய அலெக்ஸ் பெர்குசன், அவருடன் இணைந்து வாழ்ந்த தனது ஆடம்பர வீட்டினை சந்தையில் விற்பனைக்கு வைத்துள்ளார்.
இந்த வீட்டிற்கு 3.5 மில்லியன் பவுண்ட்டுகள் (இலங்கை மதிப்பில் 144 கோடியே 55 லட்சம்) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3 வயது மூத்த மனைவி
Cheshire Mansion என்று அழைக்கப்படும் இந்த ஆடம்பர மாளிகை ஐந்து படுக்கையறைகளை கொண்டது. மனைவியை இழந்ததால் சுமார் 7,000 சதுர அடிகளில் அமைந்துள்ள இந்த வீட்டில் இருந்து வெளியேற அலெக்ஸ் விரும்புகிறார்.
அலெக்ஸ் பெர்குசனுக்கு தற்போது 81 வயதாகிறது, அவரது மனைவி இறக்கும்போது அவருக்கு வயது 84 என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |