இலங்கை முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் பொலிசாரால் கைது: விரிவான பின்னணி
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் முன்னாள் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சசித்ர சேனாநாயக்க பொலிசாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தாமாக முன்வந்து சரண்
நீதிமன்றத்தினால் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சேனாநாயக்க விளையாட்டு ஊழல் விசாரணைப் பிரிவில் தாமாக முன்வந்து சரணடைந்தார் என்றே கூறப்படுகிறது.
விளையாட்டில் முறிகேடுகளை தடுக்கும் நோக்கில் 2019ல் செயல்படுத்தப்பட்ட விளையாட்டு தொடர்பான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்தின் முதல் நடவடிக்கையாக இந்தக் கைது அமைந்துள்ளது.
2020ல் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) முதல் சுற்றில் ஆட்ட நிர்ணயம் செய்வதற்காக சேனாநாயக்க இரண்டு கிரிக்கெட் வீரர்களை அணுகியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பந்துவீச்சு நடவடிக்கை சிக்கல்களால்
மேலும், விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட இருக்கும் சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவு தயாராகி வருகிறது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
சேனாநாயக்க இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் 49 ஒரு நாள் சர்வதேச போட்டிகளும் 24 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இருப்பினும், 2012 முதல் 2016 வரை நீடித்த அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை, அவரது பந்துவீச்சு நடவடிக்கை சிக்கல்களால் பாதிக்கப்பட்டது.
இறுதியில் 2014ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவரை வெளியேற்ற முடிவு செய்தது. தொடர்ந்து அவரது பந்துவீச்சு நடவடிக்கையை மறுவடிவமைக்க கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, சேனநாயக்க 2015ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பினார்.
துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது முந்தைய செயல்திறனை மீண்டும் பெற முடியாமல் திணறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |