முன்னாள் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ கைது: தவறான நடத்தை புகார்: பொலிஸார் அதிரடி
பிரித்தானியாவின் முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆண்ட்ரூ கைது
பொது அலுவலகத்தில் தவறான முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பிரித்தானிய இளவரசரும், முன்னாள் யோர்க் பிரவுமான(Duke of york) ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர்(Prince Andrew) பொலிஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

நார்போக்(Norfolk) பகுதியை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் என்று தேம்ஸ் வேலி பொலிஸார் முதலில் அறிவித்திருந்த நிலையில், அந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஆண்ட்ரூ தான் என்பதை BBC உறுதிப்படுத்தியுள்ளது.
கைது நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆண்ட்ரூ-வின் நார்போக் மற்றும் பெர்க்சயர் பகுதிகளில் உள்ள அவரது சொத்துகளில் பொலிஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
பொலிஸார் தகவல்
சமீபத்திய கைது நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் ஆர்வம் இருப்பதை காவல்துறை நன்கு அறியும்.
ஆனால் விசாரணை நேர்மையாக இடையூறு எதுவும் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்வது அவசியம் என்பதால், சரியான நேரத்தில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

அரச பதவி பறிப்பு
தற்போது ஒட்டுமொத்த அரசியல் உலகையும் உலுக்கி வரும் எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக இளவரசர் ஆண்ட்ரூ மீது பல குற்றச்சாட்டுகள் வெளியானதை தொடர்ந்து கடந்த 2025ம் ஆண்டே அவரது அரச பதவிகள் அனைத்தையும் பிரித்தானிய மன்னர் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பறித்து இருந்தார்.
எப்ஸ்டீன் உடனான தொடர்பு மட்டுமின்றி, ஆண்ட்ரூ-வுக்கு எதிரான பல பெண்களின் நேரடி பாலியல் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து சுமத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |