அமெரிக்க பாதுகாப்பு ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்த விவகாரம்: டிரம்பிடம் நீதிமன்றம் விசாரணை
நாட்டின் பாதுகாப்பு ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்து இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிமன்றத்தில் ஆஜர்
அமெரிக்காவின் ஜனாதிபதி இருந்த டொனால்ட் டிரம்ப் தனது பதவியை விட்டு வெளியேறிய பிறகு நாட்டின் பாதுகாப்பு விவரங்கள் அடங்கிய ஆவணங்களை சட்டவிரோதமாக வீட்டில் வைத்து இருந்தாக குற்றம் சுமத்தப்பட்டார்.
அத்துடன் நாட்டின் சம்பந்தப்பட்ட ஆவணங்களை திரும்ப பெற முயன்ற அதிகாரிகளிடம் டிரம்ப் பொய் கூறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Just In: the United States Attorney Generals office has arrested the leading political candidate for the 2024 Presidential election.
— ??Travis?? (@Travis_in_Flint) June 13, 2023
Donald Trump has been placed under arrest in a Miami federal court. People are cheering on this indictment which is based on an investigation… pic.twitter.com/C7gXZjJCnG
இதையடுத்து தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்து தான் குற்றவாளி அல்ல என தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு ஆவணங்கள் தொடர்பான விசாரணைக்காக டிரம்ப் மியாமி பெடரல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
மூடப்பட்ட அறையில் விசாரணை
டிரம்ப்பின் மனு தாக்கல் விசாரணை கேமராக்களால் பொருத்தப்பட்ட மூடப்பட்ட அறையில் நடத்தப்பட்டது, மேலும் இது அமெரிக்க மாஜிஸ்திரேட் நீதிபதி ஜொனாதன் குட்மேன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த குற்றச்சாட்டில் டிரம்ப் உதவியாளர் வால்ட் நௌடாவும் உட்படுத்தப்பட்டு இருந்த நிலையில், அவரும் இந்த விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
SPN Exclusive footage:
— Stew Peters (@realstewpeters) June 13, 2023
Trump arriving at SHAM indictment proceedings. pic.twitter.com/VAoIp1y1EE
விசாரணை முடிவடைந்த நிலையில் எத்தகைய பயண கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் இல்லாமல் நீதிமன்றத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார்.
ஆனால் இந்த வழக்கில் முக்கிய சாட்சியங்களுடன் டிரம்ப் எத்தகைய பேச்சுவார்த்தையும் வைத்து கொள்ள கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.