புடின் ரொம்ப மாறிவிட்டார்... அந்தர் பல்டி அடித்த அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதை இதுவரை கண்டிக்காத அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது அந்தர் பல்டி அடித்து, புடின் உக்ரைன் எல்லைக்கு படைகளை அனுப்பும்போது, அவர் பேச்சுவார்த்தை நடத்தத்தான் முயற்சிக்கிறார் என தான் எண்ணியதாகத் தெரிவித்துள்ளார்.
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியுள்ள ட்ரம்ப், புடின் ரொம்பவே மாறிவிட்டார் என்று கூறியுள்ளார்.
தான் அமெரிக்க அதிபராக இருந்தபோது புடினுடன் நல்ல உறவு வைத்துக்கொண்டிருந்தார் ட்ரம்ப்.
எல்லோரையும்போல, புடின் அமெரிக்காவுடனும் மற்ற நாடுகளுடனும் நல்லதொரு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வார் என்றே தான் எண்ணியதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், ஆனால், அவர் மாறிவிட்டார் என்று நான் நினைக்கிறேன். அது உலகுக்கு கவலையை ஏற்படுத்தும் ஒரு விடயம் என்று கூறியுள்ளார்.
புடினுடனான உறவுக்காக ட்ரம்ப் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், உக்ரைனை ஊடுருவியதற்காக உலகமே புடினை விமர்சிக்க, ட்ரம்ப் இதுவரை அவரை விமர்சிக்கவில்லை என்பதற்காக அவர் சமீபத்திலும் கடும் விமர்சனங்களுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.