கோலாகலமாக நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயம்.., உதயநிதியை வாழ்த்திய கமல், ஏ.ஆர்.ரகுமான்
சென்னையில் இன்று பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதிக்கு கமல் ஹாசன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு ஆகியவை இணைந்து பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று மற்றும் நாளையும் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கமல் வாழ்த்து
இதுகுறித்து கமல் ஹாசன் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதால் உற்சாகம்.
நம் விருந்தோம்பல் மற்றும் விளையாட்டுத் திறமை ஆகியவற்றைக் காண்பதில் ஆவலுடன் இருக்கிறேன்.
தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராகவும், கிழக்கின் டெட்ராய்டகாவும் மாற்றியதற்கு முதலமைச்சர் மற்றும் உதயநிதிக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து
இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவது இந்தியாவிற்கே உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது.
சென்னையில் இதனை நடத்துவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |