ரூ 330,000 கோடி மதிப்பு கொண்ட நிறுவனம் திவால்... அதன் நிறுவனரின் தற்போதைய சொத்து மதிப்பு
உலகம் முழுவதும் தற்போது பேசு பொருளாக இருக்கும் WeWork நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு காலத்தில் ரூ.330,000 கோடி என இருந்தது.
WeWork தற்போது 39 நாடுகளில்
தற்போது திவாலானதாக அறிவிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பிரபலமான மற்றும் பரவலாக அறியப்பட்ட ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய சரிவு இதுவென கூறுகின்றனர்.
பொது பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்பதால் WeWork தற்போது 39 நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. ரூ.330,000 கோடி மதிப்பிலான நிறுவனம் திவாலாவதற்கு பல காரணங்களை பட்டியிடுகின்றனர்.
ஆனால் அதில் முதன்மை காரணமாக கூறப்படுவது அதன் நிறுவனரான Adam Neumann என்பவரையே. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து வெளியேற நிர்வாக குழு அவருக்கு கோரிக்கை வைப்பதற்கு முன்னரே, அவர் பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்திருந்தார்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், Adam Neumann-ன் தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ.18,318 கோடி என்றே கூறப்படுகிறது. இஸ்ரேலில் பிறந்து வளர்ந்த Adam Neumann தமது மூன்றாம் வகுப்பு வரையில் எழுதவோ வாசிக்கவோ முடியாமல் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
7 வயதில் பெற்றோர் விவாகரத்து பெற, அதன் பின்னர் பல வீடுகளில் தங்கும் நிலை ஏற்பட்டது. பட்டப்படிப்பை முடித்த பின்னர், இஸ்ரேல் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
2010ல் WeWork நிறுவனம்
அதன் பின்னர் நியூயார்க் நகருக்கு குடிபெயர்ந்த Adam Neumann, வணிகத்துறையில் கல்வி பயின்றுள்ளார். WeWork நிறுவனத்தை தொடங்கும் முன்னர் சிறார்களுக்கான ஆயத்த ஆடைகள் நிறுவனம் ஒன்றிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
பல கட்ட முயற்சிகளுக்கு பின்னர், 2010ல் WeWork நிறுவனத்தை அவர் தொடங்கினார். 2022ல் இந்த நிறுவனத்தின் வருவாய் என்பது 324.5 கோடி அமெரிக்க டொலர் என்றே கூறப்பட்டது.
அளவுக்கு அதிகமான போதை மருந்து பயன்பாடு மற்றும் விசித்திரமான நடவடிக்கைகள் காரணமாக நிர்வாக குழு Adam Neumann-ஐ தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலக கட்டாயப்படுத்தியது.
இருப்பினும், WeWork நிறுவனத்தில் இருந்து அவர் பெருந்தொகை ஆதாயமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |