ஒரே ஆண்டில் ரூ 100 கோடி வருவாய் ஈட்டிய மொபைல் செயலி: அதிரடியாக முடக்கிய அரசாங்கம்
இந்திய அரசாங்கம் 25 OTT தளங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஆபாச காட்சிகளை ஒளிபரப்பியதற்காக அவற்றைத் தடை செய்துள்ளது.
வீடியோ ஸ்ட்ரீமிங்
அரசாங்கத்தால் அவ்வாறு தடை செய்யப்பட்ட செயலிகளில் ஒன்று Ullu app. இந்தியாவில் ஆபாசக் காட்சிகளுக்காக மட்டும் செயல்பட்டு வந்த இந்த மொபைல் செயலியின் நிறுவனர் விபு அகர்வால் மெத்தப்படித்தவர்.
உல்லு டிஜிட்டல் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டவர் விபு அகர்வால். உத்தரபிரதேசத்தின் லக்னோவில் பிறந்து வளர்ந்த இவர் ஐஐடி கான்பூரில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார்,
ஜப்பானில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார் மற்றும் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். எஃகு உற்பத்தி, கல்வி, சிமென்ட் உற்பத்தி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவருக்கு மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பணி அனுபவம் உள்ளது.
1995ல், டிஎம்டி எஃகு கம்பிகளை உற்பத்தி செய்யும் ஜெய்பீகோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கி தனது தொழில்முனைவோர் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் அவர் ஹிமாலயா ஃபைபர்டெக் சிமென்ட் பிரைவேட் லிமிடெட்டில் இயக்குநராகப் பணியாற்றினார் மற்றும் ஜெய்பீ கான்வென்ட் பள்ளியை நிறுவினார்.
2018ல், விபு அகர்வால், முகம் சுழிக்க வைக்காத ஆபாச காட்சிகளை உள்ளடக்கிய பெரியவர்களை இலக்காகக் கொண்ட வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான உல்லு செயலியை அறிமுகப்படுத்தினார்.
தினசரி 5 கோடி
உல்லு செயலி நெருக்கமான கதைசொல்லல் மற்றும் துணிச்சலான காட்சிகளுடன் மிக விரைவிலேயே பிரபலமானது. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி 11 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது.
தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை மட்டும் 5 கோடி. சந்தாவிற்கான விலை வரம்பு 10 நாட்களுக்கு ரூ.90 முதல் ஒரு வருடத்திற்கு ரூ.792 வரை அமைக்கப்பட்டதே பல கோடி பயனர்களை ஈர்க்க காரணமாக அமைந்தது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், உல்லு செயலி 2024 நிதியாண்டில் மட்டும் ரூ.100 கோடி வருவாயை ஈட்டியுள்ளது, நிகர லாபம் ரூ.15 கோடிக்கும் அதிகம்.
மட்டுமின்றி, விபு அகர்வாலின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 2023 ஆம் ஆண்டில் ரூ.70 கோடியிலிருந்து 2025 ஆம் ஆண்டில் ரூ.93-100 கோடியாக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |