இஸ்ரேலுக்கு உதவியதால் அமெரிக்காவின் சேதமடைந்த ஏவுகணை அமைப்புக்கான செலவு ரூ 17,000 கோடி
இஸ்ரேல் - ஈரான் மோதலின் போது சேதமடைந்த அமெரிக்காவின் THAAD அமைப்பை சீரமைக்க இராணுவத்தினருக்கு ஓராண்டுக்கு மேல் தேவைப்படும் என்றே கூறப்படுகிறது.
ரூ 17,291 கோடி செலவாகும்
ஈரானின் கடுமையான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா தனது THAAD அமைப்பை பயன்படுத்தியது. அதில் இரண்டு THAAD அமைப்புகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தற்போது அதற்கான செலவு என்பது 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ 17,291 கோடி செலவாகும் என்றே இராணுவம் மதிப்பிட்டுள்ளது.
ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள 150க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் THAAD அமைப்பில் இருந்து ஏவப்பட்டுள்ளது. அதாவது பென்டகனால் வாங்கப்பட்ட ஏவுகணை தடுப்பு அமைப்பில் கிட்டத்தட்ட கால் பங்காகும்.
ஈரானுக்கு எதிராக THAAD மட்டுமின்றி, SM-3 அமைப்பில் 80 எண்ணிக்கையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக செங்கடலில் ஹவுதிகளை எதிர்கொள்ள அமெரிக்க இராணுவம் கணிசமான எண்ணிக்கையிலான வெடிமருந்துகளை செலவிட்டுள்ளது.
இஸ்ரேலின் இரும்பு கவசம்
ஏமனில் ஹவுதி தலைமையகம் மற்றும் ஆயுத உள்கட்டமைப்பை குறிவைத்து ட்ரம்ப் நிர்வாகம் ஒரு தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கும் வரையில் அது நீடித்தது. அந்த நடவடிக்கையானது SM-2, SM-3, மற்றும் SM-6 வகைகள் உட்பட அதிக அளவிலான அமெரிக்க இடைமறிப்பு ஏவுகணைகளை செலவிட வைத்தது.
இதில் SM-2க்கான செலவு 2.1 மில்லியன் டொலர், 3.9 மில்லியன் டொலர் SM-6 அமைப்புக்கு செலவாகும். SM-3 அமைப்புக்கு 28 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது.
இஸ்ரேலின் பெரிதும் கொண்டாடப்படும் இரும்பு கவசம் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை முறியடிக்க முடியாமல் திணறவே, அமெரிக்கா தலையிட்டதாக கூறுகின்றனர். மட்டுமின்றி, இஸ்ரேல் தங்களது ஆரோ 2 மற்றும் ஆரோ 3 அமைப்புகளையும் பயன்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |